வியாழன், 17 செப்டம்பர், 2015

இயேசு இருக்கிறார் நமக்காக...

இம்மட்டும் காத்தவர்
இனியும் காத்திடுவார்  -என்றுமே
கவலை நமக்கில்லையே
கர்த்தர் நம்மோடு இருக்கையிலே.... 

திங்கள், 7 ஏப்ரல், 2014

பொன்மொழி

பிறரை  அதிகமாக நம்புகிறவனை
சிலர் போற்றுகிறார்கள்
பலர் ஏமாற்றுகிறார்கள்


பிறர் உனக்கு செய்த துன்பத்தை
மறந்துவிடு , இல்லையென்றால்
மன்னித்துவிடு அதனை
நினைத்துக்கொண்டே வாழ நினைத்தால்
உன் நிம்மதி மரித்துவிடும்.


முயற்சிக்காமல் இருப்பதைவிட
முயற்சித்து தோற்றுப்பார்....
          வென்றுவிடுவாய்   -உன்
முதல் எதிரியான முயலாமைதனத்தை...



முயற்சியென்பது  தீக்கங்கு போல
விடாமல் ஊதிகொண்டேயிருந்தால்
விரைவில் வெற்றியென்னும்  தீ பிடிக்கும்....

 


 

வெள்ளி, 19 ஏப்ரல், 2013

வேண்டிய வரம் தரும் வேதபோதகர் திருவிழா

                             

கொடியேற்றம்
                      மே 5, 2013 ஞாயிறு
                       காலை 11.00 மணி
திருநாள்
                       மே 8,2013 புதன்
                       மாலை 6.00 மணி

கொடியிறக்கம்
                         மே 9, 2013 வியாழன்
                          காலை 5.30/10.00 மணி

வேதபோதகரின் பிள்ளைகளே !
                             எல்லாம் வல்ல இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் ! இவ்வாண்டு விண்ணேற்ற பெருவிழா  அன்று , மே மாதம் 8,9 புதன் மாலை , வியாழன் காலையில் நம் வேதபோதகரின் 303- ஆம் ஆண்டு திருவிழா சிறப்பாக கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நம்பிக்கை ஆண்டில் நமது நம்பிக்கையை வளர்க்கவும் , வேதபோதகரின் அருள் பெற்று செல்லவும் உங்களை அன்போடு அழைக்கிறோம்.
              
                               " உங்கள் துக்கம் சந்தோசமாய் மாறும் "


அன்புடன் அழைக்கும் 
அருட்திரு. முனைவர் எஸ்.அருள் பிரகாசம்  பங்குத்தந்தை 

அலைபேசி: 9443498197
         

வெள்ளி, 15 மார்ச், 2013

இயேசப்பா அழைக்கிறார் ஓடி வா

தம்பி ஓடி வா...
தங்கை ஓடி வா...
நம் கர்த்தரை பாட
தம்பி ஓடி வா...
தங்கை ஓடி வா...
நம் தேவாதி தேவனை தேட
ஓடி வா...ஓடி வா...ஓடி வா...
உன்னை இயேசப்பா அழைக்கிறார் ஓடி வா...

உண்மையான தேவனின்
உள்ளத்தில் நீ இருக்க - உன்
உள்ளத்தை கொடு - முழு
உண்மையாய் கொடு...

பகலிலும் இரவினிலும்
இயேசுவை துதித்து  பாடு
உன்னை பாதுகாப்பாய் நடத்திடுவார்
என்றும் பாசத்தோடு...

நல்ல அறிவினை தந்து
நம்மை ஆசீர்வதிப்பார்
எல்லா  வேளைகளிலும் - இயேசு
நம் கூட இருப்பார்

எத்தனை தீங்கு வந்தாலும்
நம்மை அணுகாது
நம்மோடு இயேசப்பா இருக்கையில்
நமக்கு பயமேது...
  



சனி, 9 மார்ச், 2013

பழகு

மரங்களை வெட்டும் கூட்டம்
மழை  வேண்டி
கழுதைக்கு கல்யாணம்  செய்து வைக்கிறது...
கடைசிவரை கண்ணீரே வடிக்கிறது...
தன்னை திருத்தி விட்டால்- உலகம்
தானாய் திருந்தி விடும்.....


மனம் ஒரு குரங்கு அல்ல
அதை காட்டிலும் மேலானது...
மனதை ஆள தெரிந்தவன்  மகான்
மனதை அடக்க தெரிந்தவன் மனிதன்
மனதை அடக்க முடியாதவன் மூடன் ....


இன்பம் துன்பம் இரண்டுமே
எல்லோர் வாழ்க்கையிலும் வேணுமே..
இரண்டில் ஒன்று குறைந்தால்
மனமும் மரமாய் போகுமே...


சிரித்து வாழ பழகு - வாழ்க்கையில்
சிறந்து வாழ பழகு  உன்
கடமையை தெரிந்து வாழ பழகு
கவலையை மறந்து வாழ பழகு...
நாள் முழுவதும் பழகு
நல்லதை மட்டுமே பழகு....




 

வியாழன், 17 ஜனவரி, 2013

வேதபோதகர் திருத்தலம் ,கழுகேர்கடை

அகஸ்டின் கப்பெல்லி (Augustinus Capelli) இத்தாலி நாட்டைச் சேர்ந்த ஒரு இயேசு சபை துறவி  ஆவார். மக்கள் இவரை வேதபோதகர் என்றே அழைத்தனர்.கிபி. 1710- 1715 வரை மதுரையில் கிறிஸ்தவ நற்செய்தி அளித்தார். மதுரைக்கு அருகே  கழுகுமடையில் (கழுகேர்கடை ) கோவில் கட்டி  கிறிஸ்தவ பணியாற்றினார் . அதுமட்டுமல்லாது  இறைமகன் இயேசுவின் பெயரால் பல அற்புதங்களையும் செய்தார் . இதனால் பலரும் அவரை தேடி வந்து இறைமகன் இயேசுவையே தன்  சொந்த இரட்சகராக ஏற்றுகொண்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த  புறமதத்தினர் அச்சுறுத்தலால் வேதபோதகர் கழுகுமடையைவிட்டு  வெளியேறி 1712 ல் கூனம்பாடி கிராமத்தில் தங்கினார் .  இறைப்பணியை  இடைவிடாமல் பல ஊர்களுக்கும் செய்து வந்தார். அந்த களைப்பால் வியாதி அவரை வாட்டியது. இருப்பினும்  நடந்தே  மீண்டும் இறைபணியாற்ற  கழுகுமடைக்கு வந்தார். ஆனால் வியாதி அவரை இறைபணியாற்ற விடவில்லை. வியாதியை குணமாக்க கொடுத்த மருந்தே விஷமாக மாறியதால் வேதபோதகர் 1715 ம் ஆண்டு ஜூலை 4 ம் நாள் தனது 36 ம் வயதில்  இறைமகன் இயேசுவிடம் சென்றார் . 1711ல்  அவர் கட்டிய கோவிலிலேயே  அடக்கம் செய்யப்பட்டார். அவர் அடக்கம் செய்யப்பட்ட கல்சிலுவை இன்னும்  வேதபோதகர் திருத்தலத்தில் காணப்படுகிறது. வேதபோதகரால் நன்மைஅடைந்த இலட்சக்கணக்கானவர்களுள் நானும் ஒருவன். நீங்களும் நன்மையடைய வேண்டிய வரமளிக்கும் வேதபோதகரிடம் வாருங்கள். உங்கள் குறைகளை வேதபோதகரால்  தீருங்கள்.

கடற்கரை



தனியாக  நான்  நின்ற நேரத்திலே
தவழ்ந்து வந்தது கடல் காற்று.....
சின்னஞ்சிறுவன்  என் மேனியிலே
சில்லென்று  அடித்தது  நேற்று .......

கலங்கி   தவிக்கும் கப்பலோட்டிக்கு
கரை எங்குள்ளது  என
விளக்கம்  தருவதால்  உன்னை  
கலங்கரைவிளக்கம் என்றார்களோ

கடலருகே கவிபாடும் குயில் யாரோ
கடலலை  என்பது அதன் பேரோ
கரைத்தது  என் காலருகே இருந்த
மண்ணைமட்டுமல்ல  என்னையும்தான்.....